Sunday, January 2, 2011

PHANTOM THE GREAT

காமிக்ஸ் நண்பரே,

                                தங்கம் கிடைத்ததா? இல்லை. நல்ல நட்பு தங்கத்தை விட சிறந்தது. இந்த வசனம் எந்த கதையில் வரும்?

காமிக்ஸ் உலகின்  "டான்", அனைவரும் அறிந்த உயர்திரு .வேதாள மாயாத்மா வின் "ஜூம்போ" கதை பற்றி ஒரு அலசல்.

                                இக்கதையில், வேதாளர் ஒரு நாள் காயமடைந்த குட்டி யானையை  பார்க்கிறார். அதன் கால் முறிவு காயத்திற்கு  சிகிச்சை அளிக்கிறார். முதலில் வேதாளரை கண்டு மிரளும் குட்டி யானை பின்னர் வேதாளரின்  இரக்க மனதை புரிந்து கொண்டு சிகிச்சைக்கு உடன்படுகிறது . அதற்கு ஜூம்போ என்று பெயர் இடுகிறார் .
                            
                                சிகிச்சை முடிந்தவுடன் ஜூம்போ வை  காட்டில் விடுகிறார்.நன்றியுடன் காட்டிற்குள் செல்கிறது அந்த யானை.

                               சில மாதங்களுக்கு பின்பு கொடுங்கோல் அரசனை எதிர்த்த வேதாளர் சிறைப்படுகிறார்.அந்த கொடுங்கோலன் வேதாளர்க்கு மரண  தண்டனை அளிக்கிறான்.அவன் யானையின் காலால் மிதிக்குமாறு உத்தரவிடுகிறான்.வேதாளர்  மரணத்தை எதிர் பார்த்து பீடத்தில் தலையை வைக்கிறார்.யானை வருகிறது.

 

                             













                                                   
மரணத்தை மிக அருகில் பார்த்த வேதாளர் ஆச்சரியம் அடைகிறார்.தலையை மிதிக்க வந்த அந்த யானை வேதாளர்   கண்களை உற்று பார்த்தது .வேதாளரும்  கண்டுகொண்டார்.

                              ஜூம்போ !!!!!! என ஆர்ப்பரிக்கிறார். ஜூம்போ வேதாளரை துதிக்கையால் தூக்கி தன் மேல் வைக்கிறது . வேதாளர்  ஜூம்போ உதவியுடன் கொடுங்கோலனை  சிறை பிடிக்கிறார்.


                  
                              இதை படிக்கும் போது ராம நாராயணன் படம் பார்த்தது போல் தோன்றினாலும் ,சிறு வயதில் என்னை மிகவும் பாதித்த கதை.

ஆரம்பத்தில் கேட்ட வசனம் அடுத்த பதிவாக... இந்த இடுகைக்கு உதவிய நல்லவருக்கு நன்றி  !

12 comments:

  1. intha pathivai patri muthl comment ennudaiyathu..

    ReplyDelete
  2. பதிவை நீரே போட்டுட்டு, கருத்தையும் நீரே போட்டு கிட்டா, இது ஐல்போங்கு :)

    இது எந்த காமிக்ஸ் புத்தகத்தில் வந்தது என்று பகிற முடியுமா... வண்ணம் மற்றும் பக்க லேஅவுட் வைத்து இது முத்து காமிக்ஸாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    வேதாள மஹாத்மா எந்த பாலகனின் சிறு வயது நினைவுகளை தான் பாதிக்கவில்லை. இது போன்ற பல கதைகளில் அவர் தன் சக வாழ் உயிரினங்களுக்கு கொடுக்கும் மரியாதை மற்றும் நேசபாவம், படிக்கும் அனைவருக்கும் அத்தகைய எண்ணங்களை தங்களை அறியாமல் உண்டு பண்ணி விடும்.

    இனி இத்தளம் பேன்டம் கதைகளுக்கு மட்டும் தானா....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஆங்,சொல்ல மறந்துட்டேன்.மீ த பர்ஸ்ட்.

    எனக்கு முன்ன கமெண்ட் போட்ட எல்லா பயலும் போங்கு பசங்க.நான் தான் ஒரிஜினல்.அக்காங்!

    ReplyDelete
  5. தோ,முதல் வரி இப்ப தான் படிச்சேன்.நண்பரே!கைய கொடுங்க.அருமையான எழுத்து நடை.பின்னிட்டீங்க.இருங்க முழுசா படிச்சிட்டு வந்து சொல்றேன்.(அப்புறம்,சொன்னபடி ஸ்கேன்) ;)

    ReplyDelete
  6. //தங்கம் கிடைத்ததா?//

    யாருயா நீரு விவரம் கெட்ட மனுசனா இருக்கீர்?இப்பல்லாம் ஸ்கேன் தான் ஓய் trend. ;)

    ஏன்யா, யானைய பத்தின கதைய எலிக்குட்டி சைஸுக்கு எழுதி இருக்கீரே? :)

    //வீரர்கள் அனைவரையும் செத்தவர்கள் போல கீழே விழச் சொல்.இல்லை,நீ செத்து கீழே விழுவது திண்ணம்.//

    அடடா,என்ன ஒரு காமிக்ஸ் குத்து. ;)

    //ராம நாராயணன் படம் பார்த்தது போல் தோன்றினாலும் ,சிறு வயதில் என்னை மிகவும் பாதித்த கதை.//

    ஹிஹி,பாதித்தது தெரியுது. ;)

    ReplyDelete
  7. டியர் காமிக்ஸ் அரக்கன்,

    அதிரடிப்படை
    அரக்க மனம், இரக்க குணம்.

    யப்பா இப்படி பயமுறுத்துகிறீர்களே.

    இக்கதையை சிறு வயதில் படித்திருக்கிறேன். அமீரின் அருகில் இருக்கும் அழகிய சிட்டு அருமை. தங்கமா நட்பா என்றால் தங்கத்துடன் கம்பி நீட்டும் சங்க தலைவர். [ தங்கம்- வயது 18 ]

    ReplyDelete
  8. படிக்காத பழைய கதையை பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே, அடுத்த பதிவு எப்போது?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Chinna vayadhil swarasyamga paditha Comics puthahangal kidaikaadhaa? yendru irunthen.Thanks for writing in this blog.Especially Phantom stories niraiya publish pannunga.Thanks

    ReplyDelete
  11. from spider,
    உங்கள் கே ள்விக்கு விடை கார்சனின் கடந்த காலம்

    ReplyDelete