Monday, May 9, 2011

RIB KIRBY KOLLAIKKAARANAA?

வணக்கம் நண்பர்களே!
          இப்பதிவில் நுழையும் முன் ஒரு முக்கிய செய்தி. இதுவரை காமிக்ஸ் பற்றிய செய்திகள் வார,மாத இதழ்களில் வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், புலனாய்வுப் பத்திரிக்கையான ஜூனியர் விகடனில் காமிக்ஸ் கதை சுருக்கம் வந்துள்ளதை நண்பர் மூலம் அறிந்தேன்.
        10 /4 /11  தேதியிட்ட இதழின் 53 ம் பக்கத்தில் , மாலைமதி காமிக்ஸின் "தோர்ப்பதர்க்காகவே சூதாடிய மோசக்காரி" கதையின் சுருக்கம் வந்துள்ளது.  அந்த கருமத்தை நீங்கள் கண்டு மகிழலாமே!
       

                                                பட்லர் படுகொலை
        
         டிடெக்டிவ் ரிப் கிர்பி சாகசம். முத்து காமிக்ஸின் 70 -வது வெளியீடு. ஒரு வண்ண இதழ்.

         திரு.லிப்டன் பங்களாவின் இன்னிசை விருந்தில் கிர்பி கலந்துகொள்கிறார். அதில் வயலின் வாசிக்கும் திருடன் கார்லோ , திருமதி. லிப்டனின் கைசெயினை திருடி, கிர்பி-ன் கோட் பாக்கெட்டில் வைத்து கிர்பி-i  அசடு வழிய வைக்கிறான்.

          பிறகு , மாறுவேஷத்தில், கிர்பி இல்லாத நேரம், அவர் இல்லம் வருகிறான் கார்லோ. ம்யூசியத்தில் திருடிய விலை மதிப்பிலா ஓவியத்தை அங்கு வைக்கிறான். கலைப்பொருள் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிக்கும் தகவல் அளிக்கிறான். மீண்டும் மாட்டிக் கொள்ளும் கிர்பி , தன நற்பெயரால் விடுவிக்கப்படுகிறார்.

          பின், கார்லோ, கிர்பி போல் வேடம் பூண்டு, கிர்பி-இன் காரால் போலீசாரை மோத முயலுகிறான். இதிலும் தப்பிக்கிறார் கிர்பி.

          மிகுந்த மன வேதனையில் கிர்பி, அவரது பட்லர் டெஸ்மாண்ட் உடன் ஒய்வு நாடி  கிராமத்திலுள்ள வீட்டிற்கு செல்கிறார்.  அங்கு நடக்கும் பார்ட்டியில் கலந்து கொல்கிறார் கிர்பி. அங்கும் வரும் கயவன் கார்லோ, வேலையாள் வேஷத்தில் கிர்பி-i  கண்காணிக்கிறான். பார்ட்டியில் நடக்கும் சீட்டு விளையாட்டில் துருப்பு சீட்டை கிர்பி-இன் கோட் பாக்கட்டில் வைத்து அவமானப்படுத்துகிறான்.

           கிர்பி-யோ இந்த சம்பவத்துக்குக் காரணம் , பட்லர் டெஸ்மாண்ட் தான் என எண்ணுகிறார்.  கோபமாக டெஸ்மாண்ட் உடன் மோதலில் ஈடுபடும் கிர்பி, துப்பாக்கியால் பட்லரை சுடுகிறார். இதை மறைந்து பார்க்கும் கார்லோ, வெளிப்பட்டு கிர்பி-i  மிரட்டுகிறான்.  இறந்து போன டெஸ்மாண்ட் எழுந்து வந்து கார்லோவை மடக்குகிறான். "பட்லர் படுகொலை" தன்னை மடக்க நடந்த நாடகம் என அறிந்த கார்லோ, கிர்பி-இடம் மன்னிப்பு கேட்டுவிட்டு  ஓடுகிறான். அவ்வளோதான்.

           1978 -ம் ஆண்டு வெளியான இந்த கதை அலட்டலில்லா ரிப்கிர்பி சாகசம். கிர்பி கதைகளில் அவரின் பட்லர் டெஸ்மாண்ட் -க்கு முக்கிய இடம் உண்டு.இவரின் கதைகள் மென்மையான துப்பறியும் வகையை சார்ந்தது.

           இக்கதையில், திரு. லிப்டன் அளிக்கும் விருந்தில், கைச்செயின் திருட்டில் மாட்டிக்கொண்ட கிர்பி, விருந்தில் இருந்து வெளியேறும்போது, "என் இடுப்பில் வெள்ளிசாமான் எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும்" என்று நினைப்பதான வசனம் நல்ல நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு. 

            கிர்பி-இன் கதைகள் அதிரடி சாகசப் பிரியர்களுக்குப் பிடிக்காவிடினும், "போர்" அடிக்காது என்பது என் எண்ணம்.  நன்றி! 
          

Friday, April 29, 2011

TRAILER

காமிக்ஸ் காதலர்களுக்கு வணக்கம். 

                                                          நண்பர்களே இந்த போஸ்டில்  எந்த கதையையும் எதிர்பார்க்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்  கொள்கிறேன். அதாவது இன்னும் இரண்டொரு நாளில் ஒரு நல்ல , பழைய  காமிக்ஸ் கதையை எழுத உள்ளேன்.  அதற்கான ஒரு முன்னோட்டமே  இந்த உளறல். எனவே தான், கதையை எதிர்பார்க்கும் நண்பர்கள் இந்த போஸ்ட்-I   படிக்கவே வேண்டாம்.
                                                           ஒ.கே. கேட்க மாட்டீர்கள். உங்கள் தலையெழுத்து. அது   என்னது ? TRAILER ? அவனவன்  எது எதுக்கோ TRAILER  போடுறான். நம்ம ஒரு நல்ல கதையை எடுத்துக்காட்ட TRAILER போடக்கூடாதா? அது தான் இந்த விபரீத முயற்சி.  சில க்ளு-க்கள்  தருகிறேன்.  அதன் மூலம் வரும் மே  முதல் தேதி வரும் கதையை  யூகியுங்களேன்.  இனி க்க்ளுஸ்....
                                                         1 . கண்டிப்பாக இந்த முறை வேதாளரின் சாகசம் கிடையாது.
                                                          2 . முத்துகாமிக்ஸ்-ல்  முதல் 80 வெளியீடுகளில் ஒன்று.
                                                          3 . இதுவரையில் மறுபதிப்பு செய்யப் படாத காமிக்ஸ்.
                                                          இந்த களு-க்கள்  போதுமென நினைக்கிறன். இவற்றை வைத்து , அடுத்து வரவிருக்கும் போஸ்ட்-இ  கண்டு பிடிக்கும் ஒருவருக்கு, அந்த காமிக்ஸ்-ன்  ஒரிஜினல் பிரதி தரப்படுமா? என்று கேட்கவேண்டாமே.
                                                          சமீப காலமாக காமிக்ஸ் பற்றி காட்டுத் தனமாக பதிவுகள் எழுதும் நண்பர்களுக்கும், காமிக்ஸ் ஒன்றும் இல்லாமல் ஸ்கேன் காபிகளை வைத்து பூச்சாண்டி காட்டுபவர்களுக்கும், காமிக்ஸ் பல வைத்திருந்தும் பதிவேதும் இடாமல் அடுத்தவர்களின் பதிவை படித்து குறை கூறும் நல்ல உள்ளங்களுக்கும், எதிரியாக நினைத்துகொண்டு இயங்கி , பின் அன்னாருடைய போஸ்ட் சூப்பர்... என்று அந்தர் டைவ் அடித்து எச்சில் ஒழுக  பாராட்டுபவர்களுக்கும் , தான் பதிவே போடாமல் நீங்கள் ஏன் இன்னும் அடுத்த பதிவு இடவில்லை என்று  வழியும் மகான்களுக்கும் , பதிவு இட்ட பின் " மாமா பிஸ்கோத்"  "மீ த பர்ஸ்ட் "  மற்றும் "தம்பி டி இன்னும் வரல" போன்ற இலக்கிய கமெண்டு-களை இடும்  பொழுதே போகாத புண்ணியவான்களுக்கும் ,  பதிவை படித்து விட்டோம் என்று காட்டுவதற்காகவே "உளுத்த வடையும் நீயும் ஒன்றே " என்ற வார்த்தைகள் அருமை என்று அறுப்பவர்களுக்கும்,  அடுத்தவன் போட்ட கமெண்டை கட் செய்து "மீ  ALSO  REPEAT "  என்று காலர் தூக்கும்  வாழைப்பழ ..............க்கும், வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு காமிக்ஸ் மட்டும் வெளியிட்டுவிட்டு,  வருட சந்தா கட்ட நம் வாசகர்களிடம் ஆர்வமே இல்லை என்று குறை பட்டுக் கொள்ளும் நம்  அபிமான  ஆசிரியருக்கும் மற்றும் நான் எழுதுவதும் ஒரு பதிவு என்று படித்து கமென்ட் போடும் நல்லவர்களுக்கும்  மற்றும் என்னை மட்டும் பதிவுகள் போடச சொல்லி துன்புறுத்தும் நல்லவருக்கும்  நன்றிகள் பல...  விரைவில்  காமிக்ஸ் கதையுடன்  இந்த ப்ளாக்-ல்  சந்திப்போமா? 

Thursday, January 20, 2011

காவலன் = வேதாளர்

இனிய காமிக்ஸ் ரசிகர்களே,
                 "கண்ணா! லட்டு தின்ன ஆசையா? " - இந்த வசனம் எதையாவது நினைவு படுத்து கிறதா? சென்ற பதிவு உலகத்தரம் ஆனது என்ற இல்லுமிக்கும், இலக்கியதரமானது என்ற திரு.ரபிக்கிற்கும் , இந்த பதிவை காண [சைட் அடிக்க] கண் கோடி வேண்டும் என்ற காதலருக்கும், லக்கிகும், மற்றும் இந்த பதிவை +2  விலங்கியலில் சேர்க்க வேண்டும் என்ற நண்பருக்கும் நன்றிகள் பல......

[   சிங்! யாருமே இல்லாத கடைக்கு யாருக்குடா   டீ  ஆத்துற? ]

                                                                                              

           "வேதாளனின் சொர்க்கம் " என்று , இக்கதை முத்துவில், [no .84 ] வெளிவந்தது. வேதாளனின் சொர்க்கம் = ஈடன் தீவு.  இத்தீவு சிங்கம்,புலி,மான்,ச்டேகோராஸ் , குகை பூதம் என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாக வாழும் இடம்.

            திமிர் பிடித்த , பணக்கார வேட்டைக்காரன் மார்க், அவனது சகா, வழிகாட்டி ஈவான் மற்றும் ஒரு பைலட் ஆகிய நால்வர் குழு ஒரு விமானத்தில் வேட்டையாட காட்டுக்குள் நுழைகின்றனர். காட்டிலாகாவிடம்  அனுமதி பெறும் மார்க், குறிப்பிட்ட விலங்குகளை மட்டுமே வேட்டையாடுவதாக உறுதி அளிக்கிறான். பின் அந்நால்வர் குழு காட்டின் மேல் பறக்கிறது.

    
           விமானத்தில் இருந்து வரி குதிரைகளைக்  கண்ட மார்க் , விமானத்தை தரை இறக்குகிறான். விமான ஒலியினால் கலவரம் அடைந்த விலங்குகள் சிதறி ஓடுகின்றன, இதற்கிடையே,

            விண்ணை காப்பான் ஒருவன், இம்மண்ணை காப்பான் ......

             என்று பாட்டு பாடாமல் செல்லும் வேதாளர்,  விமான ஒலியினால் கவரப்படுகிறார். வேதாளர் தனது குதிரையில் விமானத்தை பின் தொடர்கிறார்.

            விலங்குகளை தவற விட்ட மார்க் குழு, " பிரன்ஹா"  மீன் நிறைத்த ஆற்றை கடக்கிறது. சிங்கம்,புலி, மான் என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையுடன் வாழும் "ஈடன் தீவு" அக்கயவனின் கண்ணில் படுகிறது. புதியவர்களை கண்டதும் , வேதாளரின் வளர்ப்புகள் வெகுண்டு ஓடலாயின....

             வேட்டைகாரர்களின் துப்பாகிகள் முழங்கியது. கலவரத்தில் ஒரு மான் குட்டி காயம் அடைகிறது. அடிபட்ட மானின் இரத்த வாடையால் ஈர்க்கப்பட்ட சிங்கமும்,புலியும்  வேதாளர் கற்பித்த உணவுப் பழக்கத்தை மறக்கிறது.  மானை நெருங்குகிறது. அதே நேரம் , துப்பாக்கி முழங்க , கயிற்றில் தொங்கியவாறு வேதாளர் ஆற்றை கடக்கிறார்.

சிங்கம் போல பறந்து வர்றான் செல்ல பேராண்டி....              அத்து மீறிய வேட்டையர்களை பந்தாடுகிறார் வேதாளர். பின் வழி தவறிய மாமிச உண்ணிகளுக்கு பாடம் கற்பிக்கிறார்.

காவலன் த டெர்ரர்
அந்த கயவர் குழுவில் நல் மனம் கொண்ட பைலட் மட்டும் மன்னிக்க படுகிறான். ஈடன் தீவின் காவலன் தான் தான்  என்று வேதாளர் நிருபிக்கிறார்.          


               ஈடன் தீவில் மீண்டும் அமைதி நிலவுகிறது.

எங்கள் தீவில் எல்லா நாளும் கார்த்திகை.....

               இக்கதையின்  அடிப்படையில் வேதாளரின் பல சாகசங்கள் உள்ளன. ஈடன் தீவு, தங்க கடற்கரை,மண்டை ஓட்டு குகை பொக்கிஷங்கள் என கதை களங்கள் தான் மாறும்.3  அல்லது   4  நபர்கள் காட்டில் நுழைவர். அதில்  ஒருவன் நல்லவனாக இருப்பான். மற்றவரகள் அக்கிரமம் புரியும் போது , அவன் வேதாளரின் பெருமைகளை எடுத்து உரைப்பான்.........   இப்படி பல கதைகளில் ரிபீட் ஆனாலும், என்றும் அலுக்காத ஹீரோ நம் வேதாளர்.

                 சமீபத்தில், முதலை பட்டாளத்தில், "ஈடன் தீவு , கதையின் போக்கை நீர்த்துப் போக செய்வதால்,அதன் முக்கியத்துவத்தைக் குறைத்ததாக படித்தேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை வேதாளரின் கதை களங்களில், ஈடன் தீவு தான் டாப்......
             

பொதுவாக வேதாளரின் கதைகளில்  இரத்தம் தெரிக்காது; வன்முறை இருக்காது.ஆபாசம் இருக்காது. [அநேகமாக ராணி காமிக்ஸில் வெளியான "வன மோகினி" தான் அதிக பட்ச  கவர்ச்சியாக நான் நினைக்கிறன்.]
             
மண்டை ஓட்டு குகை , விசித்திர குள்ளர்கள், மரணமில்லா வாழ்வு, முத்திரை மோதிரங்கள் ,காட்டிலாகா, தங்க கடற்கரை, ஈடன் தீவு என என் சிறு வயதில் என் கற்பனை உலகினை பரவசப் படுத்தியவர் வேதாளர். வேதாளர் மட்டுமே....
       
      இப்பதிவு குறித்த உங்களின் மேலான கமெண்டு களை  எதிபார்க்கிறேன்..நன்றி. 
          
பின் குறிப்பு: சென்ற பதிவின் தொடக்கத்தில் கேட்ட கேள்வி எங்கள் அறிவுக்கு விருந்தாக இருந்தது என்ற சபரி -க்கு நன்றி.
.

Sunday, January 2, 2011

PHANTOM THE GREAT

காமிக்ஸ் நண்பரே,

                                தங்கம் கிடைத்ததா? இல்லை. நல்ல நட்பு தங்கத்தை விட சிறந்தது. இந்த வசனம் எந்த கதையில் வரும்?

காமிக்ஸ் உலகின்  "டான்", அனைவரும் அறிந்த உயர்திரு .வேதாள மாயாத்மா வின் "ஜூம்போ" கதை பற்றி ஒரு அலசல்.

                                இக்கதையில், வேதாளர் ஒரு நாள் காயமடைந்த குட்டி யானையை  பார்க்கிறார். அதன் கால் முறிவு காயத்திற்கு  சிகிச்சை அளிக்கிறார். முதலில் வேதாளரை கண்டு மிரளும் குட்டி யானை பின்னர் வேதாளரின்  இரக்க மனதை புரிந்து கொண்டு சிகிச்சைக்கு உடன்படுகிறது . அதற்கு ஜூம்போ என்று பெயர் இடுகிறார் .
                            
                                சிகிச்சை முடிந்தவுடன் ஜூம்போ வை  காட்டில் விடுகிறார்.நன்றியுடன் காட்டிற்குள் செல்கிறது அந்த யானை.

                               சில மாதங்களுக்கு பின்பு கொடுங்கோல் அரசனை எதிர்த்த வேதாளர் சிறைப்படுகிறார்.அந்த கொடுங்கோலன் வேதாளர்க்கு மரண  தண்டனை அளிக்கிறான்.அவன் யானையின் காலால் மிதிக்குமாறு உத்தரவிடுகிறான்.வேதாளர்  மரணத்தை எதிர் பார்த்து பீடத்தில் தலையை வைக்கிறார்.யானை வருகிறது.

 

                             

                                                   
மரணத்தை மிக அருகில் பார்த்த வேதாளர் ஆச்சரியம் அடைகிறார்.தலையை மிதிக்க வந்த அந்த யானை வேதாளர்   கண்களை உற்று பார்த்தது .வேதாளரும்  கண்டுகொண்டார்.

                              ஜூம்போ !!!!!! என ஆர்ப்பரிக்கிறார். ஜூம்போ வேதாளரை துதிக்கையால் தூக்கி தன் மேல் வைக்கிறது . வேதாளர்  ஜூம்போ உதவியுடன் கொடுங்கோலனை  சிறை பிடிக்கிறார்.


                  
                              இதை படிக்கும் போது ராம நாராயணன் படம் பார்த்தது போல் தோன்றினாலும் ,சிறு வயதில் என்னை மிகவும் பாதித்த கதை.

ஆரம்பத்தில் கேட்ட வசனம் அடுத்த பதிவாக... இந்த இடுகைக்கு உதவிய நல்லவருக்கு நன்றி  !