Thursday, January 20, 2011

காவலன் = வேதாளர்

இனிய காமிக்ஸ் ரசிகர்களே,
                 "கண்ணா! லட்டு தின்ன ஆசையா? " - இந்த வசனம் எதையாவது நினைவு படுத்து கிறதா? சென்ற பதிவு உலகத்தரம் ஆனது என்ற இல்லுமிக்கும், இலக்கியதரமானது என்ற திரு.ரபிக்கிற்கும் , இந்த பதிவை காண [சைட் அடிக்க] கண் கோடி வேண்டும் என்ற காதலருக்கும், லக்கிகும், மற்றும் இந்த பதிவை +2  விலங்கியலில் சேர்க்க வேண்டும் என்ற நண்பருக்கும் நன்றிகள் பல......

[   சிங்! யாருமே இல்லாத கடைக்கு யாருக்குடா   டீ  ஆத்துற? ]

                                                                                              

           "வேதாளனின் சொர்க்கம் " என்று , இக்கதை முத்துவில், [no .84 ] வெளிவந்தது. வேதாளனின் சொர்க்கம் = ஈடன் தீவு.  இத்தீவு சிங்கம்,புலி,மான்,ச்டேகோராஸ் , குகை பூதம் என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாக வாழும் இடம்.

            திமிர் பிடித்த , பணக்கார வேட்டைக்காரன் மார்க், அவனது சகா, வழிகாட்டி ஈவான் மற்றும் ஒரு பைலட் ஆகிய நால்வர் குழு ஒரு விமானத்தில் வேட்டையாட காட்டுக்குள் நுழைகின்றனர். காட்டிலாகாவிடம்  அனுமதி பெறும் மார்க், குறிப்பிட்ட விலங்குகளை மட்டுமே வேட்டையாடுவதாக உறுதி அளிக்கிறான். பின் அந்நால்வர் குழு காட்டின் மேல் பறக்கிறது.

    
           விமானத்தில் இருந்து வரி குதிரைகளைக்  கண்ட மார்க் , விமானத்தை தரை இறக்குகிறான். விமான ஒலியினால் கலவரம் அடைந்த விலங்குகள் சிதறி ஓடுகின்றன, இதற்கிடையே,

            விண்ணை காப்பான் ஒருவன், இம்மண்ணை காப்பான் ......

             என்று பாட்டு பாடாமல் செல்லும் வேதாளர்,  விமான ஒலியினால் கவரப்படுகிறார். வேதாளர் தனது குதிரையில் விமானத்தை பின் தொடர்கிறார்.

            விலங்குகளை தவற விட்ட மார்க் குழு, " பிரன்ஹா"  மீன் நிறைத்த ஆற்றை கடக்கிறது. சிங்கம்,புலி, மான் என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையுடன் வாழும் "ஈடன் தீவு" அக்கயவனின் கண்ணில் படுகிறது. புதியவர்களை கண்டதும் , வேதாளரின் வளர்ப்புகள் வெகுண்டு ஓடலாயின....

             வேட்டைகாரர்களின் துப்பாகிகள் முழங்கியது. கலவரத்தில் ஒரு மான் குட்டி காயம் அடைகிறது. அடிபட்ட மானின் இரத்த வாடையால் ஈர்க்கப்பட்ட சிங்கமும்,புலியும்  வேதாளர் கற்பித்த உணவுப் பழக்கத்தை மறக்கிறது.  மானை நெருங்குகிறது. அதே நேரம் , துப்பாக்கி முழங்க , கயிற்றில் தொங்கியவாறு வேதாளர் ஆற்றை கடக்கிறார்.

சிங்கம் போல பறந்து வர்றான் செல்ல பேராண்டி....



              அத்து மீறிய வேட்டையர்களை பந்தாடுகிறார் வேதாளர். பின் வழி தவறிய மாமிச உண்ணிகளுக்கு பாடம் கற்பிக்கிறார்.





காவலன் த டெர்ரர்
அந்த கயவர் குழுவில் நல் மனம் கொண்ட பைலட் மட்டும் மன்னிக்க படுகிறான். ஈடன் தீவின் காவலன் தான் தான்  என்று வேதாளர் நிருபிக்கிறார்.          


               ஈடன் தீவில் மீண்டும் அமைதி நிலவுகிறது.

எங்கள் தீவில் எல்லா நாளும் கார்த்திகை.....

               இக்கதையின்  அடிப்படையில் வேதாளரின் பல சாகசங்கள் உள்ளன. ஈடன் தீவு, தங்க கடற்கரை,மண்டை ஓட்டு குகை பொக்கிஷங்கள் என கதை களங்கள் தான் மாறும்.3  அல்லது   4  நபர்கள் காட்டில் நுழைவர். அதில்  ஒருவன் நல்லவனாக இருப்பான். மற்றவரகள் அக்கிரமம் புரியும் போது , அவன் வேதாளரின் பெருமைகளை எடுத்து உரைப்பான்.........   இப்படி பல கதைகளில் ரிபீட் ஆனாலும், என்றும் அலுக்காத ஹீரோ நம் வேதாளர்.

                 சமீபத்தில், முதலை பட்டாளத்தில், "ஈடன் தீவு , கதையின் போக்கை நீர்த்துப் போக செய்வதால்,அதன் முக்கியத்துவத்தைக் குறைத்ததாக படித்தேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை வேதாளரின் கதை களங்களில், ஈடன் தீவு தான் டாப்......
             

பொதுவாக வேதாளரின் கதைகளில்  இரத்தம் தெரிக்காது; வன்முறை இருக்காது.ஆபாசம் இருக்காது. [அநேகமாக ராணி காமிக்ஸில் வெளியான "வன மோகினி" தான் அதிக பட்ச  கவர்ச்சியாக நான் நினைக்கிறன்.]
             
மண்டை ஓட்டு குகை , விசித்திர குள்ளர்கள், மரணமில்லா வாழ்வு, முத்திரை மோதிரங்கள் ,காட்டிலாகா, தங்க கடற்கரை, ஈடன் தீவு என என் சிறு வயதில் என் கற்பனை உலகினை பரவசப் படுத்தியவர் வேதாளர். வேதாளர் மட்டுமே....
       
      இப்பதிவு குறித்த உங்களின் மேலான கமெண்டு களை  எதிபார்க்கிறேன்..நன்றி. 
          
பின் குறிப்பு: சென்ற பதிவின் தொடக்கத்தில் கேட்ட கேள்வி எங்கள் அறிவுக்கு விருந்தாக இருந்தது என்ற சபரி -க்கு நன்றி.
.

8 comments:

  1. நம்ம வேதாளர் சிங்க புலி வைத்து நன்றாக கைபந்து,கால்பந்து ஆடியிருக்கிறார்.அனல் பறக்கும் சண்டை காட்சிகளை வழங்கியதற்கு நன்றி

    ReplyDelete
  2. சிறுவயதில் என்னை மெஸ்மெரைஸ் செய்த அற்புத பான்டசிகளில் ஈடன் தீவு முக்கிய இடம் பெறும் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஒவ்வொரு முறையும் வேதாளரின் கதைகளில் அந்த ஈடன் தீவிற்கு ஆபத்து விளையும் போது, அது அழிந்து விட கூடாது, வேதாளர் சீக்கிரம் வந்து காப்பாற்றி விடுவார் என்று பரபரப்பாக இருக்க வைக்கும் கதை சொல்லல்.

    ஆனால், வேதாளரின் கதையை எழுதிய லீ பால்கே, பிறகு ஒரு தருணத்தில் கற்பனை கோட்டையில் மட்டுமே சாத்தியமாகும் இந்த தீவை, எந்த கதையிலும் சேர்க்காமல் பார்த்து கொண்டார் என்பது தகவல். ஆனாலும், பழைய கதைகள் இன்றும் மனதை கொள்ளை கொள்ளும் விதம் தான்.

    அந்த வேதாளர் சிங்கம் புலி இரண்டையும் இரண்டு கையில் நிறுத்தி கொடுக்கும் போஷ் அலாதி.

    ReplyDelete
  3. Nalla pathivu. Vazhthukkal sir.

    ReplyDelete
  4. vethalarin arumaiyana kathaikal innum niraiya ullanave..! thodarvirkala?----- R.Saravanakumar.

    ReplyDelete
  5. varugai thantha anaivarukkum nandri!

    ReplyDelete
  6. மிக நன்னா இருக்கறது! தொடருங்கோ!

    ReplyDelete
  7. ஆமாம் ஆமாம் இப்படி ஈடத் தீவை காக்க வேதாளர் நடத்தும் புனதப்போர் பேஷ் பேஷ் :)

    http://hollywood.mayuonline.com

    ReplyDelete