Monday, May 9, 2011

RIB KIRBY KOLLAIKKAARANAA?

வணக்கம் நண்பர்களே!
          இப்பதிவில் நுழையும் முன் ஒரு முக்கிய செய்தி. இதுவரை காமிக்ஸ் பற்றிய செய்திகள் வார,மாத இதழ்களில் வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், புலனாய்வுப் பத்திரிக்கையான ஜூனியர் விகடனில் காமிக்ஸ் கதை சுருக்கம் வந்துள்ளதை நண்பர் மூலம் அறிந்தேன்.
        10 /4 /11  தேதியிட்ட இதழின் 53 ம் பக்கத்தில் , மாலைமதி காமிக்ஸின் "தோர்ப்பதர்க்காகவே சூதாடிய மோசக்காரி" கதையின் சுருக்கம் வந்துள்ளது.  அந்த கருமத்தை நீங்கள் கண்டு மகிழலாமே!
       

                                                பட்லர் படுகொலை
        
         டிடெக்டிவ் ரிப் கிர்பி சாகசம். முத்து காமிக்ஸின் 70 -வது வெளியீடு. ஒரு வண்ண இதழ்.

         திரு.லிப்டன் பங்களாவின் இன்னிசை விருந்தில் கிர்பி கலந்துகொள்கிறார். அதில் வயலின் வாசிக்கும் திருடன் கார்லோ , திருமதி. லிப்டனின் கைசெயினை திருடி, கிர்பி-ன் கோட் பாக்கெட்டில் வைத்து கிர்பி-i  அசடு வழிய வைக்கிறான்.

          பிறகு , மாறுவேஷத்தில், கிர்பி இல்லாத நேரம், அவர் இல்லம் வருகிறான் கார்லோ. ம்யூசியத்தில் திருடிய விலை மதிப்பிலா ஓவியத்தை அங்கு வைக்கிறான். கலைப்பொருள் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிக்கும் தகவல் அளிக்கிறான். மீண்டும் மாட்டிக் கொள்ளும் கிர்பி , தன நற்பெயரால் விடுவிக்கப்படுகிறார்.

          பின், கார்லோ, கிர்பி போல் வேடம் பூண்டு, கிர்பி-இன் காரால் போலீசாரை மோத முயலுகிறான். இதிலும் தப்பிக்கிறார் கிர்பி.

          மிகுந்த மன வேதனையில் கிர்பி, அவரது பட்லர் டெஸ்மாண்ட் உடன் ஒய்வு நாடி  கிராமத்திலுள்ள வீட்டிற்கு செல்கிறார்.  அங்கு நடக்கும் பார்ட்டியில் கலந்து கொல்கிறார் கிர்பி. அங்கும் வரும் கயவன் கார்லோ, வேலையாள் வேஷத்தில் கிர்பி-i  கண்காணிக்கிறான். பார்ட்டியில் நடக்கும் சீட்டு விளையாட்டில் துருப்பு சீட்டை கிர்பி-இன் கோட் பாக்கட்டில் வைத்து அவமானப்படுத்துகிறான்.

           கிர்பி-யோ இந்த சம்பவத்துக்குக் காரணம் , பட்லர் டெஸ்மாண்ட் தான் என எண்ணுகிறார்.  கோபமாக டெஸ்மாண்ட் உடன் மோதலில் ஈடுபடும் கிர்பி, துப்பாக்கியால் பட்லரை சுடுகிறார். இதை மறைந்து பார்க்கும் கார்லோ, வெளிப்பட்டு கிர்பி-i  மிரட்டுகிறான்.  இறந்து போன டெஸ்மாண்ட் எழுந்து வந்து கார்லோவை மடக்குகிறான். "பட்லர் படுகொலை" தன்னை மடக்க நடந்த நாடகம் என அறிந்த கார்லோ, கிர்பி-இடம் மன்னிப்பு கேட்டுவிட்டு  ஓடுகிறான். அவ்வளோதான்.

           1978 -ம் ஆண்டு வெளியான இந்த கதை அலட்டலில்லா ரிப்கிர்பி சாகசம். கிர்பி கதைகளில் அவரின் பட்லர் டெஸ்மாண்ட் -க்கு முக்கிய இடம் உண்டு.இவரின் கதைகள் மென்மையான துப்பறியும் வகையை சார்ந்தது.

           இக்கதையில், திரு. லிப்டன் அளிக்கும் விருந்தில், கைச்செயின் திருட்டில் மாட்டிக்கொண்ட கிர்பி, விருந்தில் இருந்து வெளியேறும்போது, "என் இடுப்பில் வெள்ளிசாமான் எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும்" என்று நினைப்பதான வசனம் நல்ல நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு. 

            கிர்பி-இன் கதைகள் அதிரடி சாகசப் பிரியர்களுக்குப் பிடிக்காவிடினும், "போர்" அடிக்காது என்பது என் எண்ணம்.  நன்றி! 
          

6 comments:

  1. ரிப் கிர்பி கதைகள் என்றுதான் சோடை போகாமல் போயிருக்கின்றன. உண்மையில் கூற வேண்டுமானால் சிறு வயதில் படிக்கும் போதே இக்கதைகள் பிடித்திருந்தன, ஆனால் ஏனோ ஏனை ரசிகர்கள், இவற்றை வாங்குவதில்லை என்று ஒரு மொக்கை காரணத்தை கூறி டெக்ஸ், பேன்டம் என்று மொக்கை காவியங்களையே தொடர்ந்து வெளியிட்டு கொண்டிருந்த பதிப்பகத்தை என்னவென்று நோவது.

    ரிப் கிர்பி என்றுமே பேவரைட் தான். 1978 வந்த காமிக்ஸ் கூட பத்திரமாக இருக்கிறதா... புண்ணியவான் ஐயா நீங்கள்.

    மே 9 என்று சொல்லிவிட்டு தற்போதை நிலவரங்கள் அடங்கிய இந்த பதிவை இட்ட அதிரடி படை என்ற காமிக்ஸ் அரக்கன், வண்டவாளம் தண்டவாளம் ஆகி விட்டது :)

    ReplyDelete
  2. good post friend . Hope u will do a post on rip kirby soon

    ReplyDelete
  3. நண்பரே மீண்டும் உங்கள் காமிக்ஸ் பகிர்தலை தொடருங்கள்.

    ReplyDelete
  4. அடுத்த பதிவு எப்போ நண்பா?

    ReplyDelete
  5. அன்பிற்கினிய நண்பர்கள் அனைவருக்கும்,

    இனிய மே தின நல்வாழ்த்துக்கள் !!!!!

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    ReplyDelete