காமிக்ஸ் காதலர்களுக்கு வணக்கம்.
நண்பர்களே இந்த போஸ்டில் எந்த கதையையும் எதிர்பார்க்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதாவது இன்னும் இரண்டொரு நாளில் ஒரு நல்ல , பழைய காமிக்ஸ் கதையை எழுத உள்ளேன். அதற்கான ஒரு முன்னோட்டமே இந்த உளறல். எனவே தான், கதையை எதிர்பார்க்கும் நண்பர்கள் இந்த போஸ்ட்-I படிக்கவே வேண்டாம்.
ஒ.கே. கேட்க மாட்டீர்கள். உங்கள் தலையெழுத்து. அது என்னது ? TRAILER ? அவனவன் எது எதுக்கோ TRAILER போடுறான். நம்ம ஒரு நல்ல கதையை எடுத்துக்காட்ட TRAILER போடக்கூடாதா? அது தான் இந்த விபரீத முயற்சி. சில க்ளு-க்கள் தருகிறேன். அதன் மூலம் வரும் மே முதல் தேதி வரும் கதையை யூகியுங்களேன். இனி க்க்ளுஸ்....
1 . கண்டிப்பாக இந்த முறை வேதாளரின் சாகசம் கிடையாது.
2 . முத்துகாமிக்ஸ்-ல் முதல் 80 வெளியீடுகளில் ஒன்று.
3 . இதுவரையில் மறுபதிப்பு செய்யப் படாத காமிக்ஸ்.
இந்த களு-க்கள் போதுமென நினைக்கிறன். இவற்றை வைத்து , அடுத்து வரவிருக்கும் போஸ்ட்-இ கண்டு பிடிக்கும் ஒருவருக்கு, அந்த காமிக்ஸ்-ன் ஒரிஜினல் பிரதி தரப்படுமா? என்று கேட்கவேண்டாமே.
சமீப காலமாக காமிக்ஸ் பற்றி காட்டுத் தனமாக பதிவுகள் எழுதும் நண்பர்களுக்கும், காமிக்ஸ் ஒன்றும் இல்லாமல் ஸ்கேன் காபிகளை வைத்து பூச்சாண்டி காட்டுபவர்களுக்கும், காமிக்ஸ் பல வைத்திருந்தும் பதிவேதும் இடாமல் அடுத்தவர்களின் பதிவை படித்து குறை கூறும் நல்ல உள்ளங்களுக்கும், எதிரியாக நினைத்துகொண்டு இயங்கி , பின் அன்னாருடைய போஸ்ட் சூப்பர்... என்று அந்தர் டைவ் அடித்து எச்சில் ஒழுக பாராட்டுபவர்களுக்கும் , தான் பதிவே போடாமல் நீங்கள் ஏன் இன்னும் அடுத்த பதிவு இடவில்லை என்று வழியும் மகான்களுக்கும் , பதிவு இட்ட பின் " மாமா பிஸ்கோத்" "மீ த பர்ஸ்ட் " மற்றும் "தம்பி டி இன்னும் வரல" போன்ற இலக்கிய கமெண்டு-களை இடும் பொழுதே போகாத புண்ணியவான்களுக்கும் , பதிவை படித்து விட்டோம் என்று காட்டுவதற்காகவே "உளுத்த வடையும் நீயும் ஒன்றே " என்ற வார்த்தைகள் அருமை என்று அறுப்பவர்களுக்கும், அடுத்தவன் போட்ட கமெண்டை கட் செய்து "மீ ALSO REPEAT " என்று காலர் தூக்கும் வாழைப்பழ ..............க்கும், வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு காமிக்ஸ் மட்டும் வெளியிட்டுவிட்டு, வருட சந்தா கட்ட நம் வாசகர்களிடம் ஆர்வமே இல்லை என்று குறை பட்டுக் கொள்ளும் நம் அபிமான ஆசிரியருக்கும் மற்றும் நான் எழுதுவதும் ஒரு பதிவு என்று படித்து கமென்ட் போடும் நல்லவர்களுக்கும் மற்றும் என்னை மட்டும் பதிவுகள் போடச சொல்லி துன்புறுத்தும் நல்லவருக்கும் நன்றிகள் பல... விரைவில் காமிக்ஸ் கதையுடன் இந்த ப்ளாக்-ல் சந்திப்போமா?